அபுதாபி டி10 லீக்கின் இறுதி போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே அடித்தது. 

88 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மராத்தா அரேபியன்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் லின், இந்த தொடர் முழுதும் அசத்திய நிலையில், இந்த போட்டியில் பெரிதாக ஆடவில்லை. வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சாட்விக் வால்ட்டன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 51 ரன்களை குவிக்க, 8வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மராத்தா அரேபியன்ஸ் அணி கோப்பையை வென்றது. 

இந்த தொடர் முழுதும் மிரட்டலாக பேட்டிங் ஆடிய கிறிஸ் லின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.