IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஈசியா வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அபார வெற்றி..!

ஐபிஎல் 16வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

lucknow super giants beat sunrisers hyderabad by 5 wickets in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனின் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

மயன்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமாத், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷீத். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி: 

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, க்ருணல் பாண்டியா, அமித் மிஷ்ரா, யஷ் தாகூர், ஜெய்தேவ் உனாத்கத், ரவி பிஷ்னோய்.

சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும்னு உலகத்துக்கே தெரியும்! ODI WC அணியில் கண்டிப்பா எடுக்கணும் - பாண்டிங்

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். மயன்க் அகர்வால் 8 ரன்னில் க்ருணல் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அன்மோல்ப்ரீத் சிங்கையும் (31), ஐடன் மார்க்ரமையும்(0) க்ருணல் பாண்டியா வீழ்த்தினார். நிலைத்து நின்று நிதானமாக ஆடிய ராகுல் திரிபாதியை 35 ரன்களூக்கு யஷ் தாகூர் வீழ்த்தினார்.

அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர்(16) மற்றும் அடில் ரஷீத்(4) ஆகிய இருவரையும் அமித் மிஷ்ரா வீழ்த்தினார். அப்துல் சமாத் அதிரடியாக ஆடி 10 பந்தில் 21 ரன்கள் அடித்து முடிக்க, 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே அடித்தது சன்ரைசர்ஸ் அணி. லக்னோ அணி சார்பில் க்ருணல் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

IPL 2023: அந்த ஒரு பந்தை வீச தெரியலைனா பவுலர்ஸ் வேஸ்ட்..! சிஎஸ்கே பவுலர்களுக்கு லெஜண்ட் பிராவோவின் அறிவுரை

122 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கைல் மேயர்ஸ் (13)மற்றும் தீபக் ஹூடா(7) ஏமாற்றமளித்தாலும், கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் க்ருணல் பாண்டியா இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 55 ரன்களை சேர்த்தனர். க்ருணல் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராகுலும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலக்கு எளிதானது என்பதால் 16வது ஓவரிலேயே அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் கடைசிவரை பொறுப்புடன் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios