Asianet News TamilAsianet News Tamil

LSG vs RCB: எலிமினேட்டர் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! லக்னோ அணியில் 2 மாற்றங்கள்.. ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம்

ஆர்சிபிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

lsg win toss opt to field against rcb in ipl 2022 eliminator
Author
Kolkata, First Published May 25, 2022, 8:11 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிளே ஆஃப் போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 2வது தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும். அந்த போட்டியில் ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

எனவே இந்த எலிமினேட்டரில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில் 7 மணிக்கு டாஸ் போடப்பட வேண்டிய டாஸ், மழையால் தாமதமானது. 7.55 மணிக்கு டாஸ் போடப்பட்டது. 8.10க்கு போட்டி தொடங்குகிறது. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டு க்ருணல் பாண்டியா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி

டி காக் (விக்கெட் கீப்பர்), ராகுல் (கேப்டன்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, மனன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மோசின் கான், ஆவேஷ் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய்.

ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜ் அணியில் இணைவதால் சித்தார்த் கவுல் நீக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

டுப்ளெசிஸ் (கேப்டன்), கோலி, ரஜாத் பட்டிதார், மேக்ஸ்வெல், லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஹேசில்வுட், சிராஜ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios