Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: சவாய் மான்சிங்கில் முதல் முறையாக நடக்கும் போட்டி: லக்னோவா? ராஜஸ்தானா? வெற்றி வாய்ப்பு யாருக்கு?

லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி முதல் முறையாக சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்கிறது.

LSG vs RR clash in Sawai Mansingh Indoor Stadium for first time in IPL 2023
Author
First Published Apr 19, 2023, 6:32 PM IST | Last Updated Apr 19, 2023, 6:41 PM IST

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் இன்று நடக்கும் 26ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்திற்குத் திரும்புகிறது. ஆதலால், மைதானம் எப்படி இருக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

ஏற்கனவே 5 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

IPL 2023: டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களின் ரூ.10 லட்சம் மதிப்பிலான பேட், பேடு, கிளவ்ஸ் உள்ளிட்டவைகள் திருட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதே போன்று பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஆடம் ஜம்பா, டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால் ஆகியோர் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்துகின்றனர்.

IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!

இதே போன்று லக்னோ அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடுகின்றனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மார்க் வுட், ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இந்த நிலையில் பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் முறையாக நடக்கும் போட்டி என்பதால் அதிக ரன்கள் குவிக்கும் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2023: தோனியை பார்ப்பதற்காக தனது பைக்கையும் விற்று விட்டு வந்த கோவா ரசிகர்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios