ஐபிஎல்லில் கேப்டனாக அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த குர்ணல் பாண்டியா!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக கேப்டனாக அறிமுகமான குர்ணல் பாண்டியா முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி சாதனை படைத்துள்ளார்.

LSG Skipper Krunal Pandya Duck in debut innings as captain in IPL 2023 aganst CSK at Lucknow

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. அதன்படி, கேஎல் ராகுல் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக மனன் வோஹ்ரா களமிறங்கினார். முதலில் தீபக் சகார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் முதல் 3 ஓவர்களை வீசினர். ஆனால், அதில் விக்கெட் விழாத நிலையில் பவுண்டரி தான் அதிகம் அடிக்கபட்டது. இதையடுத்து ஸ்பின்னர்களை தோனி அழைத்தார்.

ஓ, இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு பண்ணிட்டீங்களா? தோனி கேள்வி!

முதலில் மொயீன் அலி பந்து வீசினார். அவரது 3.4ஆவது ஓவரில் கைல் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மகீஷ் தீக்‌ஷனா வரவழைக்கப்பட்டார். அவர் வீசிய 5.4ஆவது ஓவரில் தொடக்க வீரர் மனன் வோஹ்ரா கிளீன் போல்டானார். இவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து லக்னோ அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா களமிறங்கினார். இவர், வந்த வேகத்தில் கோல்டன் டக் முறையில் தீக்‌ஷனா பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த அஜிங்கியா ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கேஎல் ராகுல் இல்லாமல் களமிறங்கும் LSG: சென்னை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா லக்னோ? சென்னைக்கு சாதகமான டாஸ்!

இதன் மூலமாக ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்கரம், லக்னோவிற்கு எதிரான போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் ஜார்ஜஸ் அணியின் கேப்டனாக இருந்த விவிஎஸ் லட்சுமணன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் நினைவாக புதிய பள்ளிக்கூடம்: 2300 குழந்தைகளுக்கு இலவச கல்வி

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios