ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சியட் ரேட்டிங் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், 2019ம் ஆண்டிற்கான சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை பெரும்பாலும் இந்திய வீரர்களே வென்றுள்ளனர். உலக கோப்பைக்கு முன்னதாக கோலி, பும்ரா, குல்தீப், ரோஹித் ஆகியோர் விருது வென்றிருப்பது, அவர்களுக்கு உத்வேகமாக அமைந்திருக்கும். 

ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகிய இரண்டு விருதுகளையும் கோலி வென்றுள்ளார். சிறந்த சர்வதேச பவுலர் விருதை பும்ராவும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனுக்கான விருதை ரோஹித்தும் பெற்றுள்ளனர்.

சியட் ரேட்டிங் விருதுகளை வென்ற வீரர்கள் - முழு பட்டியல்

வாழ்நாள் சாதனையாளர் விருது - மொஹிந்தர் அமர்நாத்

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி

சிறந்த சர்வதேச பவுலர் - பும்ரா

ஆண்டின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் - புஜாரா

ஆண்டின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்  - ரோஹித் சர்மா

சிறந்த டி20 வீரர் - ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியா)

சிறந்த டி20 பவுலர் - ரஷீத் கான்(ஆஃப்கானிஸ்தான்)

சிறந்த உள்நாட்டு வீரர் - அஷுடோஷ் அமன்

ஆண்டின் சிறந்த செயல்திறன் மிக்க வீரர் - குல்தீப் யாதவ்