Asianet News TamilAsianet News Tamil

பென் ஸ்டோக்ஸ் முழுமையான கிரிக்கெட்டர்.. ஹர்திக் பாண்டியா அப்படி இல்ல.! லெஜண்ட் ஆல்ரவுண்டர் கருத்து

பென் ஸ்டோக்ஸ் அளவிற்கு ஹர்திக் பாண்டியா முழுமையான கிரிக்கெட்டராக இன்னும் வளரவில்லை என்று தென்னாப்பிரிக்க முன்னாள் லெஜண்ட் ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளூசனர் கருத்து கூறியுள்ளார்.
 

lance klusener opines hardik pandya not yer reach the level of ben stokes as complete all rounder
Author
First Published Sep 30, 2022, 4:24 PM IST

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர் மட்டுமல்லாது மேட்ச் வின்னரும் கூட. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான பவுலிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர். 

காயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்த ஹர்திக் பாண்டியா, முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் அசத்தி அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க 4 பேரும் கண்டிப்பா இருந்திருக்கணும்..!

அதன்விளைவாக, மீண்டும் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்கான இடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். அவரது கெரியரில் சிறந்த ஃபார்மில் இப்போது உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து மிரட்டினார். 

ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் திறமையில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவரால் முழு பவுலிங் கோட்டாவையும் வீசமுடியுமா என்பதே கேள்வியாக இருந்துவந்த நிலையில், அண்மையில் அவர் ஆடிய தொடர்களில் எல்லாம் தனது முழு கோட்டாவை வீசி நம்பிக்கையளித்தார். 140 கிமீ வேகத்திற்கு மேல் எல்லாம் வீசி அசத்தினார்.

எனவே ஹர்திக் பாண்டியா சமகாலத்தின் மற்றொரு சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிடப்படுகிறார். அந்தவகையில், ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் லெஜண்ட் ஆல்ரவுண்டரும், தற்போதைய ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான லான்ஸ் க்ளூசனரிடமும் அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு

அதற்கு பதிலளித்த க்ளூசனர், ஹர்திக் பாண்டியாவை விட பென் ஸ்டோக்ஸ் முழுமையான கிரிக்கெட்டர். பாண்டியா கற்றுக்கொண்டே இருக்கிறார். கடந்த 2-3 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வளர்ந்துள்ளார். ஆனால் பாண்டியா இன்னும் முழுமையான கிரிக்கெட்டராக உருவாகவில்லை. விரைவில் அந்த இடத்தை அடைந்துவிடுவார் என்று லான்ஸ் க்ளூசனர் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios