பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்து, 201 ரன்கள் என்ற கடினமான இலக்கை இஸ்லாமாபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று லாகூரில் நடந்துவரும் போட்டியில் லாகூர் காலண்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
லாகூர் காலண்டர்ஸ் அணி:
ஃபகர் ஜமான், மிர்ஸா தாஹிர் பைக், அப்துல்லா ஷாஃபிக், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஹுசைன் டலட், சிக்கந்தர் ராஸா, டேவிட் வீஸ், ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.
IND vs AUS: தம்பி நீ வேலைக்கு ஆகமாட்ட கிளம்பு! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:
காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், ஹசன் அலி, ஜீஷன் ஜமீர், அப்ரார் அகமது.
முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமான் மற்றும் மிர்ஸா தாஹிர் ஆகிய இருவரும் இணைந்து அடித்து ஆடி 6.2 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்களை சேர்த்தனர். மிர்ஸா தாஹிர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய ஃபகர் ஜமான் 23 பந்தில் 36 ரன்கள் அடிக்க, அதிரடியாக ஆடி 24 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசிய அப்துல்லா ஷாஃபிக் 46 ரன்களை விளாசினார்.
அதன்பின்னர் சாம் பில்லிங்ஸ் 23 பந்தில் 33 ரன்கள் அடித்தார். சிக்கந்தர் ராஸா 10 பந்தில் 23 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். டேவிட் வீஸ் 6 பந்தில் 12 ரன்களும், ரஷீத் கான் 12 பந்தில் 18 ரன்களும் என அனைத்து வீரர்களுமே அதிரடியாக ஆடி பங்களிப்பு செய்ததால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்த லாகூர் காலண்டர்ஸ் அணி, 201 ரன்கள் என்ற கடினமான இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
