IND vs AUS: தம்பி நீ வேலைக்கு ஆகமாட்ட கிளம்பு! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிப்பதால், ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க முயற்சிக்கிறது. முதல் 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி அபார வெற்றிகளை பெற்ற இந்திய அணி அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் 3வது டெஸ்ட்டிலும் களமிறங்குகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் சொதப்புவது மட்டுமே பிரச்னையாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 3 முக்கியமான வீரர்களும் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு.
வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கேஎல் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறக்கப்படலாம். அதைத்தவிர வேறு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.
IND vs AUS: கேஎல் ராகுல் vs ஷுப்மன் கில்.. 3வது டெஸ்ட்டில் ஓபனர் யார்..? தாதா கங்குலியின் சாய்ஸ்
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.