அஷ்வின், ஜடேஜாவிற்கு சாதகமாக பிட்ச்சை ரெடி பண்ணி நம்மை போட்டு தாக்குறாங்க..! ஆஸி., முன்னாள் வீரர் விமர்சனம்
இந்திய ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் டெய்லர் விமர்சித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது.
IND vs AUS: கேஎல் ராகுல் vs ஷுப்மன் கில்.. 3வது டெஸ்ட்டில் ஓபனர் யார்..? தாதா கங்குலியின் சாய்ஸ்
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதமாக இருக்கும் என்பதையறிந்து, இந்திய அணியை கட்டுப்படுத்த நேதன் லயன், அஷ்டான் அகர், குன்னெமன், டாட் மர்ஃபி ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ளவும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டனர். ஆனாலும் இவை இரண்டையுமே ஆஸ்திரேலிய அணி சரியாக செய்யவில்லை.
டாட் மர்ஃபி, நேதன் லயன் ஆகிய இருவரும் தலா ஒரு இன்னிங்ஸில் நன்றாக பந்துவீசினர். ஆனால், இந்திய சீனியர் ஸ்பின்னர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் எதிர்கொள்வதில் ஆஸ்திரேலிய வீரர்கள் கோட்டைவிட்டனர். ஸ்பின்னை ஒழுங்காக எதிர்கொள்ளாமல் கோட்டைவிட்டு சொதப்பியது அவர்கள். ஆனால் ஆஸ்திரேலிய ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் இந்திய ஆடுகளங்களை குறைகூறிவருகின்றனர்.
இந்திய ஆடுகளங்களை இந்திய அணியின் பலமான ஸ்பின்னிற்கு சாதகமாக தயார் செய்திருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தன. ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கும் அதே விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்கும் நிலையில், இந்திய ஆடுகளங்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் டெய்லரும் விமர்சித்துள்ளார்.
சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் என் மீது காட்டிய அன்பு, அக்கறையை மறக்கவேமாட்டேன்! வாசிம் அக்ரம் உருக்கம்
இதுகுறித்து பேசிய மார்க் டெய்லர், ஆஸ்திரேலிய கண்டிஷன், இந்திய கண்டிஷனிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இப்போதெல்லாம் ஐபிஎல்லில் ஆடுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய கண்டிஷனுக்கு கொஞ்சம் பழக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆடுகளங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. மெதுவான, தணிவான, பந்து திரும்பும் மாதிரியான ஆடுகளங்களாக இருக்கின்றன. இந்திய அணியின் ஆட்டத்திற்கும் பலத்திற்கும் ஏற்றவாறு ஆடுகளங்கள் தயார் செய்யப்படுகின்றன. அந்த மாதிரியான ஆடுகளங்களில் ஆடி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பழக்கமில்லை. ஆக்ரோஷமாக ஆடுவது தவறான ஆப்சனாக இருக்காது. ஆனால் அதற்கான டெக்னிக் இருக்க வேண்டும். 2வது டெஸ்ட்டில் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆஸ்திரேலியா தவறிழைத்துவிட்டது என்று மார்க் டெய்லர் தெரிவித்தார்.