Asianet News TamilAsianet News Tamil

சண்டக்கோழி லஹிரு குமாரா.. நானும் சொம்பை இல்லடானு பேட்டை நீட்டி முறைத்த லிட்டன் தாஸ்..! மைதானத்தில் பரபரப்பு

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை ஃபாஸ்ட் பவுலர் லஹிரு குமாரா ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சண்டைக்கு சென்றார். பேட்ஸ்மேனை நோக்கி முதலில் பந்தை விட்டெறிந்த குமாரா, லிட்டன் தாஸை அவுட்டாக்கிய பின்னர், அவரிடம் தேவையில்லாமல் சண்டைக்கு சென்றார்.
 

lahiru kumara and liton das clash on field during sri lanka vs bangladesh match in t20 world cup
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 24, 2021, 6:01 PM IST

டி20 உலக கோப்பையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, பேட்டிங்கிற்கு சவாலான ஷார்ஜா ஆடுகளத்தில் 171 ரன்களை குவித்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம்(52 பந்தில் 62 ரன்கள்) மற்றும் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம்(37 பந்தில் 57 ரன்கள்) ஆகிய இருவரின் பொறுப்பான மற்றும் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 171 ரன்களை குவித்தது வங்கதேச அணி. 172 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கை விரட்டிவருகிறது.

இந்த போட்டியில் இலங்கை ஃபாஸ்ட் பவுலர் லஹிரு குமாராவின் செயல்பாடுகள் அத்துமீறி இருந்தன. களத்தில் வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் ஸ்லெட்ஜிங்/சீண்டல் என்ற பெயரில் அத்துமீறி நடந்துகொண்டார் லஹிரு குமாரா.

வங்கதேச இன்னிங்ஸின் 4வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய லஹிரு குமாரா, அந்த ஓவரின் கடைசி பந்தில் பேட்ஸ்மேன் நைம் அடித்துவிட்டு க்ரீஸை விட்டு வெளியே வந்ததால் ஸ்டம்ப்பை நோக்கி ஆக்ரோஷமாக வீசினார். நல்லவேளையாக நைம் ஒதுங்கிவிட்டார். இல்லையெனில் அந்த பந்து பேட்ஸ்மேன் நைம் மீது அடித்திருக்கும்.

இதையும் படிங்க - #INDvsPAK ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே இந்தியாவின் அலப்பறை தாங்க முடியலயே.. அவசரப்படாதீங்க என அக்ரம் எச்சரிக்கை

இதையடுத்து பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரை வீசிய லஹிரு குமாரா, அந்த ஓவரின் 5வது பந்தில் லிட்டன் தாஸை வீழ்த்திவிட்டார். அவுட்டாகி களத்தைவிட்டு வெளியேறிய லிட்டன் தாஸிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் லஹிரு குமாரா. வேண்டுமென்றே வந்து சீண்டிய குமாராவை லிட்டன் தாஸும் சும்மா விடவில்லை. குமாராவிடம் பேட்டை நீட்டி பதிலுக்கு முறைத்தார் லிட்டன் தாஸ். 

இதையும் படிங்க - T20 World Cup அவனுக்கு மட்டும் பந்து பேட்டில் மாட்டிகிட்டா இந்தியா ரொம்ப ஈசியா ஜெயிச்சுரும்..! சேவாக் அதிரடி

இதையடுத்து உடனடியாக இலங்கை வீரர்களும், அம்பயர்களும் வந்து, சமாதானப்படுத்தி அந்த சூழலை மேலும் கடினமாக்காமல் இயல்பாக்கினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios