Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup அவனுக்கு மட்டும் பந்து பேட்டில் மாட்டிகிட்டா இந்தியா ரொம்ப ஈசியா ஜெயிச்சுரும்..! சேவாக் அதிரடி

ஹர்திக் பாண்டியாவிற்கு மட்டும் கிளிக் ஆகிவிட்டால், பாகிஸ்தானை ஒருசார்பாக இந்திய அணி வீழ்த்திவிடும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

virender sehwag believes if click for hardik pandya he will finish the match for india by one sided
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 24, 2021, 4:25 PM IST

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.  இந்த உலக கோப்பையை இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளில் ஒன்று வெல்லும் என்று அதிகமானோர் மதிப்பிட்டுள்ளனர். விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை தூக்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அதிரடியான பேட்டிங், உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலிங், மாயாஜால ஸ்பின்னர் உட்பட தரமான ஸ்பின் பவுலிங் என நல்ல வலுவான மற்றும் பேலன்ஸான அணியாக திகழ்கிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஐபிஎல்லில் இருந்தே செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 14வது சீசனில் 626 ரன்களை குவித்த கேஎல் ராகுல், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகளிலும் அபாரமாக ஆடினார். ஐபிஎல்லில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஃபார்முக்கு வந்தனர்.

கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. பும்ரா, ஷமி என 2 மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களும், அஷ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் ஸ்பின்னர்களுடன் மாயாஜால ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியும் உள்ளார். எனவே அனைத்துவகையிலும் சிறந்த வீரர்களையும், நிறைய மேட்ச் வின்னர்களையும் கொண்ட அணியாக இந்திய அணி திகழ்கிறது.

பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் ஹர்திக் பாண்டியா, பவுலிங் வீசக்கூடிய அளவிற்கு ஃபிட்னெஸில் இல்லாதது தான் இந்திய அணியின் ஒரேயொரு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால் ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து  கொடுத்தார். ஹர்திக்  பாண்டியா இந்திய அணியில்  ஃபினிஷராக ஆடவுள்ள நிலையில், ஆஸி.,க்கு எதிராக சிக்ஸர் அடித்து முடித்தது நல்ல சமிக்ஞை. 

ஆனாலும் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையான பேட்டிங் ஃபார்மில் வரவில்லை. ஆனால் பாண்டியாவை பொறுத்தவரை ஒன்றிரண்டு ஷாட்டுகளே அவரது தன்னம்பிக்கையை பெற்று, அவரது இயல்பான பேட்டிங்கை ஆட உதவும்.

இதையும் படிங்க - நானே செய்தித்தாளில் படிச்சுதான் தெரிஞ்சுகிட்டேன்! டிராவிட் பயிற்சியாளராவது குறித்து அதிர்ச்சி தகவல் சொன்ன தாதா

இன்று இந்திய அணி அதன் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள நிலையில், பாண்டியா குறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், பாண்டியாவிற்கு கிளிக் ஆகிவிட்டால், இந்திய அணி ஒருசார்பாக வெற்றி பெறும். பாண்டியாவின் திறமையையும், அவர் வெற்றிகரமாக போட்டிகளை முடித்து கொடுத்திருப்பதையும் கடந்த காலங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். பவுலிங் போடுமளவிற்கு அவர் மட்டும் ஃபிட்டாக இருந்தால் அதைவிட நல்ல விஷயம் இல்லை என்று சேவாக் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios