Asianet News TamilAsianet News Tamil

3ஆவது முறையாக 5 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ்: பாலோ ஆன் தவிர்க்க போராடும் வங்கதேசம்!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் அரங்கில் 3ஆவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

Kuldeep Yadav took 5 wicket against bangladesh first test match
Author
First Published Dec 16, 2022, 10:14 AM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி கூடுதலாக 17 ரன்கள் மட்டுமே சேர்த்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

BAN vs IND First Test: இந்தியா அபார பந்து வீச்சு – 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்த வங்கதேசம்!

இதில், எபாடாட் ஹோஷைனின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் குல்தீப் யாதவ் டெஸ்ட் அரங்கில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். 16 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 6 மெய்டன்கள் ஓவர்களுடன் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலோ ஆன் தவிர்க்க 200 ரன்கள் பின் தங்கியுள்ள வங்கதேச அணி ஒரு வேளை 2ஆவது இன்னிங்ஸில் நன்றாக ஆடி அது இந்தியாவிற்கு சோதனையாக அமைந்துவிடும் என்பதால், இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranji Trophy: மீண்டும் சதம் விளையாசி அதிரடி காட்டிய இஷான் கிஷான்!

Follow Us:
Download App:
  • android
  • ios