Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: முதல் இன்னிங்ஸில் இந்தியா 404 ரன்கள்.. வங்கதேச பேட்டிங் ஆர்டரை சிதைத்த குல்தீப் யாதவ், சிராஜ்

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களை குவிக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்துள்ளது. குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

kuldeep yadav and mohammed siraj bowling well in first test and so bangladesh lost 8 wickets for just 102 runs
Author
First Published Dec 15, 2022, 5:24 PM IST

இந்தியா  - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க இந்த தொடரில் வங்கதேசத்தை 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் வெற்றி முனைப்பில் இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்..! புதிய கேப்டன் நியமனம்

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

புஜாரா -ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 149 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய புஜாரா 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்திருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 86 ரன்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அஷ்வின் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 58 ரன்களையும், குல்தீப் யாதவ் 40 ரன்களையும் விளாச முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது இந்திய அணி.

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹுசைன்(0), ஜாகிர் ஹசன்(20) ஆகிய இருவரையுமே சிராஜ் ஆரம்பத்திலேயே வீழ்த்தினார். யாசிர் அலியை 4 ரன்களுக்கு உமேஷ் யாதவ் வீழ்த்த, 4ம் வரிசையில் இறங்கிய லிட்டன் தாஸை(24) ரன்களுக்கு சிராஜ் வீழ்த்தினார். அதன்பின்னர் முஷ்ஃபிகுர் ரஹிம்(28), ஷகிப் அல் ஹசன் (3), நூருல் ஹசன்(16) மற்றும் டைஜுல் இஸ்லாம்(0) ஆகிய நால்வரையும் குல்தீப் யாதவ் வீழ்த்த, 102 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட வங்கதேச அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios