Asianet News TamilAsianet News Tamil

எனக்கு ஒரு மேட்ச்ல கூட ஆட வாய்ப்பே கிடைக்காதது வருத்தம் தான்..! அதிருப்தியை ஓபனா சொன்ன இந்திய வீரர்

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கு ஆட வாய்ப்பே கிடைக்காதது வருத்தம் தான் என்று தனது அதிருப்தியை உண்மையாகவும் வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டுள்ளார் குல்தீப் யாதவ்.
 

kuldeep yadav agrees that he was disappointed for not getting chance to play against australia for india
Author
Chennai, First Published Jan 27, 2021, 10:18 PM IST

ஆஸி., சுற்றுப்பயணத்தில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறியபோதிலும், கடைசி வரை அணியில் வாய்ப்பே பெறாத வீரர் குல்தீப் யாதவ். அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 பிரைம் ஸ்பின்னர்களும் காயத்தால் கடைசி போட்டியில் ஆடாத போது கூட, வாஷிங்டன் சுந்தர் தான் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர, குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அஷ்வின், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் காயத்தால் வெளியேறியதால், பேட்ஸ்மேன்களுக்கு குறைபாடு ஏற்பட்டது. அதனால் பேட்டிங் டெப்த்தை கருத்தில்கொண்டு பேட்டிங்கும் நன்றாக ஆடத்தெரிந்த ஸ்பின்னருக்கான தேவையிருந்ததால் வாஷிங்டன் சுந்தர் அணியில் வாய்ப்பு பெற்றார்.

அதனால் ஏகப்பட்ட வீரர்கள் காயத்தால் வெளியேறியபோதிலும், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தத்தை கேப்டன் ரஹானே மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்ததுடன், அவருக்கான நேரம் வரும் என்று இங்கிலாந்து தொடரை சுட்டிக்காட்டி நம்பிக்கையளித்திருந்தனர்.

kuldeep yadav agrees that he was disappointed for not getting chance to play against australia for india

எனவே இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசியுள்ள குல்தீப் யாதவ், எனக்கு வாய்ப்பே கிடைக்காதது சற்று ஏமாற்றம்தான். ஆனால் அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றது மகிழ்ச்சி. அணி காம்பினேஷன் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள்(இந்திய அணி) தொடரை வென்றது மிக்க மகிழ்ச்சி. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் எனக்கான நேரம் வரும். அப்படி வாய்ப்பு கிடைக்கும் போது எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வேன் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios