Asianet News TamilAsianet News Tamil

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: ஹேப்பி ஃபர்த் டே தலைவா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இன்று தனது 63 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Krishnamachari Srikkanth celebrates his 63rd birthday today
Author
First Published Dec 21, 2022, 10:06 AM IST

கடந்த 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடி ஸ்ரீகாந்த், 1981 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். அதே ஆண்டில் நவம்பர் 27 ஆம் தேதி டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

INDW vs AUSW: கடைசி டி20 போட்டியிலும் இந்தியா படுதோல்வி.. 4-1 என அபாரமாக தொடரை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி

அப்போது அவருக்கோ வயது 21. தொடக்க வீரர் சுனில் கவாஸ்கருடன் இணைந்து இந்திய அணிக்கு பல முறை வெற்றி தேடி தந்துள்ளார். இவ்வளவு ஏன், கடந்த 1983 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்தார். ஒரே போட்டியில் இந்திய அணிக்காக 50 ரன்களும், 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் வீரராக ஸ்ரீகாந்த் திகழ்கிறார்.

INDW vs AUSW: கார்ட்னெர், கிரேஸ் காட்டடி அரைசதம்.. இந்தியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேப்டனாக இருந்த போது 1989 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் அணியில் அறிமுகமானார். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டிரா ஆனாது. இதனால், ஸ்ரீகாந்த் மீது அணி நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்படவே, கடந்த 1993 ஆம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

2022ம் ஆண்டில் விளையாட்டுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்

ஓய்வுக்குப் பிறகு இந்திய ஏ பிரிவு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். அதோடு, 2008 ஆம் ஆண்டு இந்திய அணி தேர்வாளராக பணியாற்றினார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக திகழ்கிறார். அவ்வப்போது மூக்கு மேல ராஜா மூக்கு மேல ராஜா என்று கூறி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருவார்.

இந்த நிலையில், ஸ்ரீகாந்த் இன்று தனது 63 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios