Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி கேகேஆர் அணி வெற்றி..! 4ம் இடத்தை தக்கவைத்த கேகேஆர்

டெல்லி கேபிடள்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கேகேஆர் அணி புள்ளி பட்டியலில் 4ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
 

kolkata knight riders beat delhi capitals in ipl 2021 uae leg
Author
Sharjah - United Arab Emirates, First Published Sep 28, 2021, 8:34 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் ஷார்ஜாவில் இன்று நடந்த போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்தது.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவானும் ஸ்டீவ் ஸ்மித்தும் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினார்கள். தவான் 20 பந்தில் 24 ரன்கள் அடித்து ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவிற்கு பின்னர், மிடில் ஓவர்களில் வருண் சக்கரவர்த்தியையும், சுனில் நரைனையும் வீசவைத்து டெல்லி அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார் கேகேஆர் கேப்டன் மோர்கன்.

சுனில் நரைனின் பந்தில் வெறும் ஒரு ரன்னில் போல்டாகி சென்றார் ஷ்ரேயாஸ் ஐயர். நன்றாக ஆடிய ஸ்மித் 39 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர்(4), லலித் யாதவ்(0), அக்ஸர் படேல்(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். வெங்கடேஷ் ஐயர் பந்துவீசி அவரது பங்குக்கு அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

எளிதாக ஸ்கோர் செய்ய முடியாவிட்டாலும், முடிந்தவரை ஸ்கோரை உயர்த்தவேண்டும் என்பதற்காக பொறுமை காத்து ஆடிய கேப்டன் ரிஷப் பண்ட்டும் 39 ரன்னில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி அணி.

128 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மோர்கன்(0), தினேஷ் கார்த்திக்(12), நரைன்(21) என அடுத்தடுத்து ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய நிதிஷ் ராணா, இலக்கு எளிதானது என்பதால் நிதானமாக தெளிவுடன் ஆடி 36 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தார்.

3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios