IPL 2023: KKR vs GT அணிகள் பலப்பரீட்சை..! ஈடன் கார்டனில் வெற்றி யாருக்கு..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆர் - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர் ஆகிய அணிகள் வெற்றி தோல்விகளை மாறி மாறி பெற்றுவருகின்றன. ஐபிஎல் லீக் சுற்றின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில், இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான போட்டி.
IPL 2023: நான் நெனச்சது தப்பு ஆகிருச்சு..! அந்த 2 பசங்க தான் எங்க தோல்விக்கு காரணம்.. தோனி அதிரடி
ஐபிஎல் விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கும் நிலையில் நாளை கொல்கத்தா ஈடன் கார்டனில் பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கேகேஆர் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. கேகேஆர் அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச கேகேஆர் அணி:
நாராயண் ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வீஸ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: தோனியின் வெற்றி மந்திரம் இதுதான்..! ஹர்பஜன் சிங் கருத்து
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோஹித் சர்மா.