Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறை..! கேஎல் ராகுல் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறை குறித்து கேஎல் ராகுல் கருத்து கூறியுள்ளார்.
 

kl rahul speaks on england team aggressive approach in test cricket
Author
First Published Dec 12, 2022, 10:22 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாம்பியன்ஷிப் அறிமுகமான பிறகு, டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிடைப்பது வழக்கமாகிவிட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்துவதற்கு முன், அணிகள் பெரும்பாலும் தோற்றுவிடக்கூடாது என்று நினைத்துத்தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுமே தவிர, ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆடாது. அதனால் பெரும்பாலான போட்டிகள் டிராவில் தான் முடியும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின், அணிகள் வெற்றிக்காக ஆடுகின்றன. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிகளின் அணுகுமுறையே மாறிவிட்டது. சேவாக் ஆடிய காலத்தில் அப்படித்தான் அடித்து ஆடுவார். ஒருநாள் கிரிக்கெட் - டெஸ்ட் ஆகிய 2 ஃபார்மட்டிலும் ஒரேமாதிரியாகத்தான் ஆடுவார். அப்படித்தான் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது.

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

மற்ற அணிகளை விட, இங்கிலாந்து அணி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆக்ரோஷத்துடன் ஆடிவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் 506 ரன்களை குவித்து, டெஸ்ட் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் அதிக ரன்களை குவித்து சாதனையை படைத்தது இங்கிலாந்து அணி.

2வது டெஸ்ட்டிலும் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ஒருநாள் கிரிக்கெட்டில் போல அடித்து ஆடி 52 ஓவரில் 281 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடிவரும் நிலையில் இங்கிலாந்து அணியின் அணுகுமுறை குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் கருத்து கூறியுள்ளார்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

இதுகுறித்து பேசிய கேஎல் ராகுல், இங்கிலாந்து அணி ஆடுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடுகிறது. அது அவர்களுக்கு சாதகமான முடிவுகளை தருவதுடன், அவர்களுக்கு ஒத்துவருகிறது. அதனால் அதுமாதிரி ஆடுவதுடன் அந்த மாதிரி ஆடும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியான அணுகுமுறை செட் ஆகாது. கண்டிஷனை பொறுத்து அணுகுமுறை மாறும் என்று கேஎல் ராகுல் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios