டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து விலகினார் கேஎல் ராகுல்..! ஷுப்மன் கில் ரூட் கிளியர்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலிருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். 
 

kl rahul ruled out of icc wtc final due to injury he got in ipl 2023

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலிருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சிறப்பாக ஆடி 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் அந்த அணி நன்றாக ஆடிவந்த நிலையில், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்த கேப்டன் கேஎல் ராகுல் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்தும் ராகுல் விலகியுள்ளார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதிபெற்றன.

IPL 2023:என்னோட பேட்டிங் டெக்னிக்கை பின்பற்றும் ஒரே வீரர் அவன் தான்! சீக்கிரம் இந்திய அணியில் ஆடுவான் - சேவாக்

வரும் ஜூன் 7ம் தேதி முதல் லண்டன் ஓவலில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்குகிறது. இந்த ஃபைனலுக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேஎல் ராகுல் காயம் காரணமாக அந்த போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் இருக்கிறார். அவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக ஆடுவார் என்றாலும், அவருக்கு இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் குறைவு. ஆனால் கேஎல் ராகுல் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.

IPL 2023: இந்த சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்.! அடித்து சொல்லும் ரவி சாஸ்திரி

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் ஏற்கனவே சதமும் அடித்திருக்கிறார். எனவே இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்ற முறையில் ராகுல் தான் முதன்மை ஓபனிங் ஆப்சனாக இருந்தார். அனுபவ வீரரான அவர் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவு. அதேவேளையில் ஷுப்மன் கில்லின் ரூட் கிளியர் ஆனது.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KL Rahul👑 (@klrahul)

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios