ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் கேஎல் ராகுல் நாக்பூரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல், திருமணம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறவில்லை. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கேஎல் ராகுலுக்கும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடந்தது.

ஜனவரிக்கான ஐசிசி விருது: பரிந்துரை பட்டியலில் சுப்மன் கில், முகமது சிராஜ்!

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னதாக சங்கீத நிகழ்ச்சி, மெஹந்தி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. திருமணத்தைத் தொடர்ந்து மஞ்சள் பூசும் சடங்கும் நடந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில், கேஎல் ராகுல் நாக்பூர் வந்து பயிற்சியை மேற்கொண்டார்.

தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

இந்த நிலையில், நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற சாய் பாபா கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் 22,23,10 மற்றும் 2 என்று ரன்கள் அடித்திருந்தார். எனினும், அவர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் சதமாக அடிக்க வேண்டும், இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று மனதார வேண்டி சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!

இதற்கு முன்னதாக விராட் கோலி தனது குடும்பத்தோடு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அதோடு, அங்குள்ள ரிஷிகள், முனிவர்களுக்கு உணவளித்தனர். தொடர்ந்து மகள் மற்றும் மனைவியோடு டிரெக்கிங் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

View post on Instagram