தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

எஸ்ஏ20 எனப்படும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த பார்ல் ராயல்ஸ் அணி அரையிறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
 

Pretoria Capitals won by 59 runs in last league match but Paarl Royals Entered into Semi Final

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதையடுத்து 4ஆவது இடத்திற்கான போட்டியில் நேற்று பார்ல் ராயல்ஸ் அணி, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி நம்பர் 1 இடத்தில் உள்ள நிலையில், அந்த அணி நேரடியாகவே அரையிறுதிக்கு சென்று விட்டது. ஆனால், 4ஆவது இடத்தில் உள்ள பார்ல் ராயல்ஸ் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. ஆனால், அரையிறுதிப் போட்டியில் யாருடன் மோதுவது என்பதற்காக நடந்த போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜேசன் ராய், பால் ஸ்டர்லிங், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மிட்செல் வான் பூரென், டேவிட் மில்லர் (கேப்டன்), இயன் மோர்கன், இவான் ஜோன்ஸ், ஆண்டில் ஃபெலுக்வாயோ, ஃபார்ச்சூன், கோடி யூசுஃப், லுங்கி இங்கிடி.

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியூனிஸ் டி பிருய்ன் (கேப்டன்), ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம், சேனுரான் முத்துசாமி, மைகேல் பிரிட்டோரியஸ், ஈதன் போஷ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.

ஆஸ்திரேலியாவை வெல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்? அருமையான் ஐடியா கொடுத்த ரவி சாஸ்திரி!

முதலில் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில், வெற்றியை மனதில் வைத்து அபாரமாக பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் மற்றும் ஃபிலிப் சால்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 69 ரன்களை சேர்த்தனர். ஃபிலிப் சால்ட் 21 பந்தில் 39 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், காட்டடி அடித்து 41 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார்.

காலின் இங்ராம் அதிரடியாக ஆடி 21 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களும், ஜிம்மி நீஷம் 11 பந்தில் 22 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 226 ரன்களை குவித்த பார்ல் ராயல்ஸ் அணி, 227 ரன்கள் என்ற கடின இலக்கை பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு நிர்ணயித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் மட்டும் அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

12 வருட கிரிக்கெட் வாழ்க்கை: டி20 உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ஆரோன் பின்ச் ஓய்வு அறிவிப்பு!

இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை எழுவியது. இருந்தாலும், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள பார்ல் ராயல்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் மீண்டும் பார்ல் ராயல்ஸ் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. நாளை நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios