Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: கேஎல் ராகுல் அபார அரைசதம்.. ஜடேஜா பொறுப்பான பேட்டிங்..! முதல் ODI-யில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

kl rahul half century helps india to beat australia by 5 wickets in first odi
Author
First Published Mar 17, 2023, 9:06 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். ஆனால் ஸ்மித் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மிட்செல் மார்ஷ் 65 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜோஷ் இங்லிஸ், லபுஷேன், கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழக்க, 36வது ஓவரில் வெறும் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஃபாஸ்ட் பவுலர்கள் ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

189 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் இன்னிங்ஸின் 5வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், அந்த ஓவரின் 5வது பந்தில் விராட் கோலியையும்(4), கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவையும்(0) அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 16 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில்லும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கவாஸ்கர் சொன்னது தவறு.. ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ICC WTC ஃபைனலில் அந்த பையன் தான் ஆடுவான்- சபா கரிம்

கேப்டன் ஹர்திக் பாண்டியா ராகுலுடன் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாமல் இந்திய அணியில் தனது இடத்தை இழந்த கேஎல் ராகுல், இந்த போட்டியில் இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை பொறுப்புடன் பேட்டிங் ஆடி காப்பாற்றினார். நிலைத்து நின்று பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ராகுல் 75 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். ஜடேஜாவும் சிறப்பாக ஆடி 45 ரன்கள் அடித்து கடைசிவரை நின்று ஆடினார். ராகுல் - ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங்கால் 40வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios