IPL 2023: ஜெயிச்சே தீரணும்.. லக்னோ அணியில் அதிரடி மாற்றங்கள்..! லக்னோ - கேகேஆர் டாஸ் ரிப்போர்ட்

ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

kkr win toss opt to field against lsg in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து, 2வது அணியாக சிஎஸ்கேவும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. எஞ்சிய 2 இடங்களுக்கு லக்னோ, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி இடையே போட்டி நிலவுகிறது.

15 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி, இன்று கேகேஆரை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோற்றால், மும்பை, ஆர்சிபி அணிகளின் போட்டி முடிவை பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். 

எனவே வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ அணி, கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் கேகேஆரை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபக் ஹூடாவுக்கு பதிலாக கரன் ஷர்மாவும், ஸ்வப்னில் சிங்கிற்கு பதிலாக கிருஷ்ணப்பா கௌதமும் ஆடுகின்றனர். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், கரன் ஷர்மா, பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணல் பாண்டியா (கேப்டன்), ஆயுஷ் பதோனி, கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மோசின் கான்.

கேகேஆர் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷையர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios