ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். 

ஐபிஎல் 15வது சீசன் இன்று தொடங்குகிறது. மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன.

தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடுகிறது. கேகேஆர் அணியும் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரின்ன் தலைமையில் ஆடுகிறது.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியில் ருதுராஜுடன் நியூசிலாந்தின் டெவான் கான்வே தொடக்க வீரராக ஆடுகிறார். உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி, ஷிவம் துபே ஆகியோர் மிடில் ஆர்டரில் ஆடுகின்றனர். சீனியர் ஆல்ரவுண்டர் பிராவோ ஆடுகிறார். ஜடேஜாவுடன் மற்றொரு ஸ்பின்னராக நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆடுகிறார். மொயின் அலி ஆடாததால் சாண்ட்னெருக்கு இடம் கிடைத்துள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடம் மில்னே மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஜடேஜா(கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), பிராவோ, மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஆடுகின்றனர். 3ம் வரிசையில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுகிறார். அதன்பின்னர் நிதிஷ் ராணாவும், விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸும் ஆடுவார்கள். ஆண்ட்ரே ரசல் ஃபினிஷர். சுனில் நரைன் ஆட்டத்தின் சூழலை பொறுத்து இறக்கப்படுவார். உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக விளையாடிவரும் ஷெல்டான் ஜாக்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக உமேஷ் யாதவ், ஷிவம் மாவியும், ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தியும் ஆடுகின்றனர்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.