IPL 2023: SRH vs KKR போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 8 மற்றும் 9ம் இடங்களில் இருக்கும் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இந்த 2 அணிகளுமே படுமோசமாக ஆடி தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்த 2 அணிகளும் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியாது என்பதால் இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
IPL 2023: கோலி - கம்பீர் 2 பேரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும்..! ரவி சாஸ்திரி அட்வைஸ்
ஹைதராபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேகேஆர் அணியில் டேவிட் வீசாவுக்கு பதிலாக ஜேசன் ராய் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்த நாராயண் ஜெகதீசனுக்கு பதிலாக வைபவ் அரோரா சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக கார்த்திக் தியாகி ஆடுகிறார். அவர் காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை அடைந்ததால் இந்த போட்டியில் ஆடுகிறார்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ரூக், அப்துல் சமாத், மார்கோ யான்சென், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி.நடராஜன்.