Asianet News TamilAsianet News Tamil

கேகேஆர் அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்

கேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். 

kkr team appointed brendon mccullum as new head coach
Author
India, First Published Aug 16, 2019, 10:29 AM IST

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. அடுத்த சீசன் ஐபிஎல்லின் 13வது சீசன். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக திகழ்வது கேகேஆர் அணிதான். 

கேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். 

kkr team appointed brendon mccullum as new head coach

2018ல் நன்றாக ஆடிய கேகேஆர் அணி, 2019 சீசனில் சரியாக ஆடாததோடு அணியில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல், அணியில் வெளிப்படையாக சில விஷயங்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அணியில் இருக்கும் குழப்பத்தை அம்பலப்படுத்தியது. கடந்த சீசனின் முதற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த கேகேஆர் அணி, இரண்டாம் பாதியில் படுமோசமாக சொதப்பியது. 

கேகேஆர் அணியை அடுத்த சீசனுக்கு மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் நீக்கப்பட்டார். 

kkr team appointed brendon mccullum as new head coach

இதையடுத்து கேகேஆர் அணியின் முன்னாள் வீரரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான பிரண்டன் மெக்கல்லம், கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. ஆனால் பிரண்டன் மெக்கல்லமையே தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது கேகேஆர் அணி நிர்வாகம். 

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் சீசனில் கங்குலி தலைமையிலான கேகேஆர் அணியில் ஆடினார் மெக்கல்லம். 2008லிருந்து 2010 வரை மூன்று சீசன்களில் கேகேஆர் அணியில் மெக்கல்லம் ஆடினார். அதன்பின்னர் மீண்டும் 2012 மற்றும் 2013 ஆகிய சீசன்களிலும் கேகேஆர் அணியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios