ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை 7  விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஜடேஜா(கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), பிராவோ, மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூசிலாந்தின் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ருதுராஜை டக் அவுட்டாக்கி அனுப்பிய உமேஷ் யாதவ், மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வேவையும் 3 ரன்னில் வீழ்த்தினார். அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 28 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அம்பாதி ராயுடு 15 ரன்னில் ரன் அவுட்டானார். ஷிவம் துபே 3 ரன்னில் ஆட்டமிழக்க, 10.5 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சிஎஸ்கே.

அதன்பின்னர் ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். டெத் ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடிய நிலையில், கடைசி 2 ஓவர்களில் தோனி பவுண்டரிகளை விளாசினார். விண்டேஜ் தோனியாக மாறி கடைசி 2 ஓவரில் அடி வெளுத்து வாங்கினார். 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிய தோனி, கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து 38 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இன்னிங்ஸை முடித்தார். 20 ஓவரில் 131 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 132 ரன்கள்

132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, 44 ரன்கள் அடித்தார். நிதிஷ் ராணா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய சாம் பில்லிங்ஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் இலக்கு எளிதானது என்பதால், 19வது ஓவரில் இலக்கை எட்டி கேகேஆர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி.