ஐபிஎல் 15வது சீசனில் இன்றைய போட்டியில் மோதும் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி பெற்ற கேகேஆர் அணி, 2வது போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்தது. எனவே இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

ஆர்சிபிக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, அந்த வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.

இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படாது. இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ஏனெனில் ஆடும் லெவனில் மாற்றம் செய்வதற்கான அவசியம் இல்லை.

உத்தேச கேகேஆர் அணி:

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஷெல்டான் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சௌதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ராஜ் பவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், சந்தீப் ஷர்மா, ராகுல் சாஹர்.