சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் முக்கியமான அணி. அந்த அணி எப்போதுமே மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணியாக திகழ்ந்துள்ளது. 

அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் கீமார் ரோச். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 56 டெஸ்ட், 92 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவ ஃபாஸ்ட் பவுலரான கீமார் ரோச், சர்வதேச கிரிக்கெட்டில் பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கால் மிரட்டியவர்.

ஆனால் அவரது கெரியரில் பந்துவீசியதிலேயே சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று அவரே தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய கீமார் ரோச், கண்டிப்பாக ஜாக் காலிஸ் தான். பந்துவீசுவதற்கு மிகக்கடினமான பேட்ஸ்மேன் ஜாக் காலிஸ். டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் தெளிவாக பேட்டிங் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலிங்கை எளிதாக ஆடுவார். குறிப்பாக 2010ல் நடந்த தொடரில் மிகச்சிறப்பாக ஆடினார் என்று கீமார் ரோச் தெரிவித்தார்.

ஜாக் காலிஸ், ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். காலிஸ் 519 சர்வதேச போட்டிகளில் ஆடி 577 விக்கெட்டுகளையும் 25,534 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.