Hangzhou Asian Games 2023, Karan KC: பேட் உடைந்த நிலையிலும் விளையாடிய நேபாள் வீரர் கரண் கேசி!

ஆசிய விளையாட்டு போட்டியில் உடைந்த பேட்டை வைத்து பேட்டிங் செய்த நேபாள் வீரர் கரண் கேசியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Karan KC was batting using bat with broken splice during India vs Nepal Quarter Final 1 in Asian Games at Hangzhou rsk

ஆசிய விளையாட்டு போட்டியில் டி20 போட்டியில் இடம் பெற்ற நேபாள் முதல் 2 போட்டிகளில் முறையே 273 மற்றும் 138 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் முதல் போட்டியில் மங்கோலியா அணிக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர் கேசி கரண் 2 ஓவர் வீசி ஒரு மெய்டன், ஒரு ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

World Cup 2023: உலகக் கோப்பைக்கான தொடக்க விழா ரத்து: கேப்டன்களின் அணிவகுப்பு மட்டுமே நடைபெற வாய்ப்பு?

ஆனால், 2ஆவது டி20 போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், தான் இன்று நடந்த இந்தியாவிற்கு எதிரான முதல் கால் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 100 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 37 ரன்கள் எடுக்க, ஷிவம் துபே 25 ரன்கள் எடுத்தார்.

Hangzhou 2023: கேனோ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா – 62 பதக்கங்களுடன் 4ஆவது இடம்!

பின்னர், கடின இலக்கை துரத்திய நேபாள் அணிக்கு முன்வரிசை வீரர்கள் ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இதில், திபேந்திர சிங் ஐரி 32 ரன்களும், குஷால் புர்டெல் 28 ரன்களும், குஷால் மல்லா 29 ரன்களும் எடுத்தனர். ஆனால், பின்வரிசை வீரர்கள் 7, 6, 5 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் நேபாள் அணி 17.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

அப்போது வேகப்பந்து வீச்சாளர் கரண் கேசி களமிறங்கினார். அவர், 13 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 18 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், அவர் 12 ரன்கள் எடுத்திருந்த போது அவரது பேட் உடைந்திருந்தது. அதோடு தான் அவர் பேட்டிங் ஆடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

India vs Nepal, Quarter Final 1: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios