Asianet News TamilAsianet News Tamil

ரவி சாஸ்திரியை தூக்கிட்டு இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கணுமா? கபில் தேவ் அதிரடி

ரவி சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமா என்பது குறித்து முன்னாள் உலக கோப்பை வின்னிங் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

kapil dev opinion about whether indian team head coach has to change or not
Author
Chennai, First Published Jul 5, 2021, 7:16 PM IST

விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கி கொடுத்த ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தற்போது இருந்துவருகிறார்.

kapil dev opinion about whether indian team head coach has to change or not

இந்நிலையில் தான், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சென்றுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாகத்தான் ராகுல் டிராவிட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது அமைந்திருக்கிறது.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ்,  இப்போதைக்கு பயிற்சியாளர் மாற்றத்தை பற்றி பேச வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். இந்த இலங்கை தொடர் முடியட்டும். எப்படி ஆடுகிறார்கள், என்ன மாதிரியான முடிவு கிடைக்கிறது என்றெல்லாம் பார்ப்போம். புதிய பயிற்சியாளரை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்படும்பட்சத்தில், அவரை மாற்றுவதற்கான அவசியமில்லை. காலம்தான் பதில். அதைவிடுத்து இப்போதே அதைப்பற்றி பேசுவது, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios