Asianet News TamilAsianet News Tamil

கோலிக்காக நல்லா ஆடுற இளம் வீரர்களை பழி கொடுத்துராதீங்க! அருமையான எடுத்துக்காட்டுடன் அதகளம் செய்த கபில் தேவ்

ஃபார்மில் இல்லாத, நன்றாக விளையாடாத விராட் கோலிக்காக, திறமையான இளம் வீரர்களை ஓரங்கட்டிவிடக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியிருக்கிறார்.
 

kapil dev opines that team india should give chance inform youngsters in place of unform virat kohlil in t20 team
Author
Chennai, First Published Jul 9, 2022, 4:50 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.

2019 நவம்பர் மாதம் கடைசியாக சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளிலும் சொதப்பிவருகிறார்.

ஐபிஎல்லில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஐபிஎல்லிலும் 16 இன்னிங்ஸ்களில் வெறும் 341 ரன்கள் மட்டுமே அடித்தார். டி20 உலக கோப்பை நெருங்குவதால் இங்கிலாந்து தொடர் அவருக்கு மிக முக்கியமானது. எனவே இந்த தொடரில் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க - சிஎஸ்கேவிலிருந்து வெளியேறுகிறார் ஜடேஜா! சிஎஸ்கே தொடர்பான சமூக வலைதள பதிவுகளை மொத்தமாக நீக்கிய ஜடேஜா

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி சரியாக ஆடவில்லை. இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி என வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி ஆடுவதால், நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் தீபக் ஹூடா உட்காரவைக்கப்படுவார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில், வீரர்களின் புகழ்ச்சி மற்றும் பிரபலத்தை அடிப்படையாக வைத்து வாய்ப்பளிக்காமல், நல்ல ஃபார்மில் உள்ள திறமையான வீரர்களை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து.

அதைத்தான் கபில் தேவும் கூறியிருக்கிறார். விராட் கோலி குறித்து பேசிய கபில் தேவ், விராட் கோலியை டி20 அணியிலிருந்து நீக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 2 பவுலரான அஷ்வினை, டெஸ்ட் அணியில் சேர்க்காமல் உட்கார வைக்க முடியும் என்றால், நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலியை ஏன் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டக்கூடாது? என்று கபில் தேவ் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க - ENG vs IND 2வது டி20: சீனியர்ஸ் வந்துட்டாங்க; நீங்கலாம் கிளம்புங்கப்பா..! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்

மேலும் இதுகுறித்து பேசிய கபில் தேவ், விராட் கோலியை பல ஆண்டுகளாக நாம் எப்படி பார்த்திருக்கிறோமோ அந்த மாதிரி விராட் இப்போது ஆடவில்லை. அவரது அருமையான ஆட்டத்தால் தனக்கென பெயர், புகழ் ஆகியவற்றை சம்பாதித்தார். ஆனால் அந்த பெயர், புகழுக்காக மட்டுமே அவரை அணியில் வைத்துக்கொண்டு, நல்ல ஃபார்மில் அருமையாக விளையாடும் இளம் வீரர்களை ஓரங்கட்டமுடியாது. விராட் கோலியை ஓரங்கட்டுவதை ஓய்வு, நீக்கம் என எப்படி வேண்டுமானால், அவரவர் வசதிக்கேற்ப சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் இப்போதைய ஃபார்மின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு அமையவேண்டும் என்று கபில் தேவ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios