- Home
- Sports
- Sports Cricket
- ENG vs IND 2வது டி20: சீனியர்ஸ் வந்துட்டாங்க; நீங்கலாம் கிளம்புங்கப்பா..! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்
ENG vs IND 2வது டி20: சீனியர்ஸ் வந்துட்டாங்க; நீங்கலாம் கிளம்புங்கப்பா..! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. டி20 தொடர் முடிந்ததும், ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது.
சௌத்தாம்ப்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முதல் டி20 போட்டியில், டெஸ்ட் போட்டியில் ஆடிய கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அதனால் தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், அக்ஸர் படேல் ஆகியோர் அணியில் வாய்ப்பு பெற்றனர். சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவரும் நிலையில், அவரும் முதல் போட்டியில் ஆடினார்.
இந்த போட்டியில் கோலி, ஜடேஜா, பும்ரா அணிக்கு திரும்புவதால், தீபக் ஹூடா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் நீக்கப்படுவார்கள். ரிஷப் பண்ட் அணிக்குள் வருவதால் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் தினேஷ் கார்த்திக்கை அணியில் வைத்திருப்பதற்காக ஏதேனும் மாற்றம் செய்யப்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.