இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்தன. அதில் டாம் மூடி, மைக் ஹெசன், ஃபில் சிம்மன்ஸ், ராபின் சிங், ரவி சாஸ்திரி உட்பட 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஃபில் சிம்மன்ஸ், இந்த போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாகவும், ஆனால் விஷயங்களை தொகுத்தளித்த விதத்திலும் கம்யூனிகேஷன் திறனிலும் சாஸ்திரி சிறந்து விளங்கியதால் அவரை தேர்வு செய்ததாக கபில் தேவ் தெரிவித்தார். 

ரவி சாஸ்திரிக்கு அடுத்தடுத்த இடங்களில் மைக் ஹெசன் மற்றும் டாம் மூடி இருந்துள்ளனர். மைக் ஹெசனும் டாம் மூடியும் சாஸ்திரிக்கு கடுமையாக டஃப் கொடுத்துள்ளனர். டாப் 3 பேரின் லிஸ்ட்டை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது. அதில் மைக் ஹெசனின் பெயரை கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தவறாக எழுதியுள்ளது. Mike Hesson தான் அவரது பெயர். ஆனால் அந்த லிஸ்ட்டில் Mike Hassen என எழுதப்பட்டிருந்தது.

ஹெசனுக்கு பதிலாக ஹாசன் என தவறாக எழுதியிருந்ததை கண்ட நெட்டிசன்கள், கடுமையாக விமர்சித்துவருகின்றனர். கபில் தேவ் தலைமையிலான ஆலோசனைக்குழுவை வசைபாடி வருகின்றனர்.