ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கொப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், 1983 உலகக் கோப்பை டிராபியை வென்றவருமான கபில் தேவ், ரோகித் சர்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 7, மிட்செல் மார்ஷ் 15, ஸ்டீவ் ஸ்மித் 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர், சரி, விக்கெட் விழுகிறதே இந்தியா ஜெயிச்சிரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

IND vs AUS Final:டிராபியை மதிக்க தெரியாத அணியிடம் டிராபி – எங்களுக்கு கிடைச்சிருந்தா பொக்கிஷமா பாத்திருப்போம்!

இறுதியாக, ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்திய வீரர்கள் கண்ணீர்விட்டு அழுத காட்சியை காண முடிந்தது. ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் என்று ஒவ்வொருவரும் கண்ணீர் துளிகளுடன் காணப்பட்டனர்.

வலியும், வேதனையும் கொடுத்த அந்த ஒரு தருணம் – கண்ணீர் துளிகளை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய டீம் இந்தியா!

இந்திய அணி வெற்றி பெறும் போது ஆறுதல் கொடுத்த ரசிகர்கள் தற்போது தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணிக்கு பக்க பலமாக தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான கபில் தேவ், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வலியும், வேதனையும் கொடுத்த அந்த ஒரு தருணம் – கண்ணீர் துளிகளை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய டீம் இந்தியா!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரோகித் நீ செய்ததில் உன்னதமானவன். உங்களுக்காக நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன. இது கடினமானது தான் என்று எனக்கு தெரியும். உற்சாகமாகவே இருங்கள். இந்தியா உங்களுடன் உள்ளது என்று பாராட்டி ஆறுதல் கூறியுள்ளார்.

India vs Australia World Cup Final: உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத இளைஞர் உயிரிழப்பு!

Scroll to load tweet…