MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • வலியும், வேதனையும் கொடுத்த அந்த ஒரு தருணம் – கண்ணீர் துளிகளை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய டீம் இந்தியா!

வலியும், வேதனையும் கொடுத்த அந்த ஒரு தருணம் – கண்ணீர் துளிகளை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய டீம் இந்தியா!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து பரிதாபமாக 2ஆவது இடம் பிடித்தது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 20 2023, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116
விராட் கோலி

விராட் கோலி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
216
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

316
விராட் கோலி

விராட் கோலி

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

416
உலகக் கோப்பை 2023

உலகக் கோப்பை 2023

அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.

516
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023

தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

616
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி

மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெ 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

716
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி

இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இதற்கு முன்னதாக, 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது.

816
ரோகித் சர்மா

ரோகித் சர்மா

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 8 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

916
இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா

2003 ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா 234 ரன்கள் மட்டுமே எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

1016
விராட் கோலி

விராட் கோலி

உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடர் நாயகனுக்கான விருது வழங்கினார்.

1116
டீம் இந்தியா

டீம் இந்தியா

இதில் வின்னிங் டீம் பவுலரான ஆடம் ஜம்பா 23 விக்கெட்டுகள் மற்றும் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகனுக்கான விருது பட்டியலில் இருந்தனர். எனினும், அதிக ரன்கள் குவித்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

1216
ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இந்த உலகக் கோப்பை தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய பிரதர் நரேந்திர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸிடம் உலகக் கோப்பை டிராபியை வழங்கினர்.

1316
சிராஜிற்கு ஆறுதல் கூறிய பும்ரா

சிராஜிற்கு ஆறுதல் கூறிய பும்ரா

இதுவரையில் விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று மொத்தமாக 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, கடைசியாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து, 10 வெற்றிக்கும் எந்த பலனும் இல்லாமல் செய்துவிட்டது.

1416
கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

ஆனால், ஆஸ்திரேலியா முதல் 2 லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு மீண்டும் வந்து சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு வந்தது.

1516
வலியும், வேதனையும் நிறைந்த தருணம்

வலியும், வேதனையும் நிறைந்த தருணம்

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் சொன்னதை, இறுதிப் போட்டியில் செய்து காட்டியுள்ளார்.

1616
அழுது கொண்டே நின்ற சிராஜ்

அழுது கொண்டே நின்ற சிராஜ்

இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவோம் என்று கூறியிருந்தார். அதன்படியே இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றியதோடு, கடைசியாக வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved