கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஃபீல்டராக கருதப்படும் ஜான்டி ரோட்ஸ், 2003-ல் ஓய்வு பெற்றார். தற்போது 55 வயதாகும் அவர், மாஸ்டர்ஸ் லீக் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவரது மின்னல் வேக ஃபீல்டிங் அனைவரையும் கவர்ந்தது. பவுண்டரியை தடுத்து ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரது ஃபீல்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபீல்டிங் என்றவுடன் நினைவுக்கு வரும் பெயர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். அவர்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த ஃபீல்டர் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையில் அவரது ஃபீல்டிங் கிரிக்கெட் போட்டிகளின் போக்கையே மாற்றியது என்றும் கூறலாம். சிறந்த ஃபீல்டர் எனச் சொல்பவரிடம் இருக்கவேண்டிய எல்லா திறமைகளும் அவரிடம் இருந்தன.
அவருக்கு இப்போது 55 வயதாகிறது. 2003ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இப்போது நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் லீக் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜான்டி ரோட்ஸ் மிரட்டலான ஃபீல்டிங் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: யாருக்கு கோப்பை?
இந்தப் போட்டியில் வாட்சன் சதத்துடன் ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் குவித்தது. ஆஸி., அணி பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்திற்கு மத்தியில் ஜான்டி ரோட்ஸ் தனது பீல்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். 19வது ஓவரின் மூன்றாவது பந்தில், ஷேன் வாட்சன் ஸ்டிரைட் டிரைவ் செய்து பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். பந்து எல்லைக் கோட்டுக்கு அருகில் நெருங்கியபோது, லாங் ஆஃப் பகுதியில் இருந்த ஜான்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் குறுக்கே பாய்ந்து பந்தைத் தடுத்து நிறுத்தினார். துல்லியமாக பந்தைக் கைகளில் பிடித்த ஜான்டி கண் இமைக்கும் நேரத்தில் திரும்ப வீசி ஏறிந்தார். பவுண்டரியாக மாறியிருக்க வேண்டிய ஷாட்டுக்கு ஜான்டியின் இந்த அற்புதமான பீல்டிங்கால் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
ஜான்டி ரோட்ஸ் தனது அபாரமான பிட்னஸை இந்த ஃபீல்டிங் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஜான்டியின் பீல்டிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வரைலாகியுள்ளது. இந்தப் போட்டியில் மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலும் ஜான்டி ரோட்ஸ் ஃபீல்டிங்கில் கலக்கினார்.
ஜடேஜா, பிலிப்ஸ் என சிறந்த பீல்டிர்கள் இன்று கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருந்தாலும் என்றும் தலைசிறந்த பீல்டிர் ஜான்டி ரோட்ஸ்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
கோடிகளைக் குவிக்கும் கிரிக்கெட் வீராங்கனைகள்! 3 பணக்கார இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்
