Asianet News TamilAsianet News Tamil

கொடுத்து வச்ச ஆளுப்பா இந்த கோலி.. கேப்டன்சி சரியில்லைனாலும் இந்திய அணிக்கு பிரச்னையே இல்ல!! ஜாண்டி ரோட்ஸ் அதிரடி

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிராதன அணிகளாக கருதப்படுகின்றன. 

jonty rhodes speaks about captains in indian team
Author
India, First Published May 16, 2019, 1:16 PM IST

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன. முன்னெப்போதையும் விட இந்திய அணி மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். 

jonty rhodes speaks about captains in indian team

அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளில் ஒரு கேப்டன் இருப்பார். அதுபோக ஆட்டத்தின் மீதான அபாரமான புரிதலுடன் கேப்டன்சி திறனுடைய அனுபவ வீரர் ஒருவர் இருப்பார். ஆனால் இந்திய அணியில் மட்டும் நிறைய கேப்டன்கள் உள்ளனர். கோலியின் கேப்டன்சியில் குறைபாடுகள் இருந்தாலும், அவர் இக்கட்டான சூழல்களில் எல்லாம் ரோஹித் மற்றும் தோனியின் ஆலோசனைகளை கேட்டுத்தான் செயல்படுகிறார் என்பதால் பிரச்னையில்லை. 

தோனியிடம் இருந்த அபாரமான கேப்டன்சி திறனும் சிறந்த தலைமைத்துவ பண்பும் ரோஹித்திடமும் உள்ளது. தோனி ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து முக்கிய பங்காற்றியுள்ளார். ரோஹித் சர்மா கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி அந்த கோப்பையை வென்று கொடுத்தார். எனவே இந்திய அணியில் தோனி, கோலி, ரோஹித் என 3 கேப்டன்கள் உள்ளனர். 

jonty rhodes speaks about captains in indian team

இதுகுறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அணியின் கேப்டன் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்திச் செல்ல வேண்டும். அதற்காக எப்போதுமே முன்னின்றோ அல்லது முன்னுதாரணமாக திகழ்ந்தோ வழிநடத்த வேண்டும் என்பதில்லை. ஒரு கேப்டனாக கோலி சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளை பெறும் பட்சத்தில் பிரச்னையில்லை. அப்படி இல்லையென்றாலும் பயப்பட தேவையில்லை. இந்திய அணியில் ரோஹித், தோனி போன்ற திறமைசாலிகள் கோலிக்கு துணையாக இருக்கின்றனர் என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios