ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 2-2 என சமனடைந்தது. 

ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 297 ரன்களையும் இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களையும் எடுத்தன. 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டென்லியின் பொறுப்பான பேட்டிங்(94 ரன்கள்), பென் ஸ்டோக்ஸின் அரைசதம் ஆகியவற்றால் இரண்டாவது இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 398 ரன்கள் முன்னிலை பெற்றது. 

399 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியில், இந்த இன்னிங்ஸில் ஸ்மித் 23 ரன்களில் அவுட்டாக, மேத்யூ வேட் அபாரமாக ஆடி சதமடித்தார். வேட் மட்டுமே நன்றாக ஆடினார். மற்ற யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமன் அடைந்தது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் லபுஷேனின் விக்கெட்டை விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் உதவியுடன் வீழ்த்தினார் ஜாக் லீச். முக்கியமான இந்த இன்னிங்ஸில் லபுஷேன் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். லீச் வீசிய பந்தை ஒரு ஸ்டெப் இறங்கிவந்து அடிக்க முயன்ற லபுஷேன், அந்த பந்தை அடிக்காமல் விட, அதை பிடித்து தோனி ஸ்டைலில் மின்னல்வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் பேர்ஸ்டோ. பேர்ஸ்டோவின் இந்த மின்னல்வேக ஸ்டம்பிங், அப்படியே தோனியின் ஸ்டம்பிங்கை பார்த்தது போலவே இருந்தது. அந்த வீடியோ இதோ...