வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 153 ரன்களை குவித்த ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 507 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்(153) மற்றும் பென் ஸ்டோக்ஸ்(12) ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதமடித்தனர். ஜோ ரூட் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 153 ரன்களை குவித்தார். 12வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 150+ ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க - ரிக்கி பாண்டிங் கெரியர் முழுக்க அவர் மீது ஆதிக்கம் செலுத்தியது எப்படி..? சூட்சமத்தை சொன்ன ஹர்பஜன் சிங்

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 150+ ரன்கள் அடித்ததில் இங்கிலாந்து முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேன் அலெஸ்டர் குக்கை பின்னுக்குத்தள்ளியுள்ளார் ஜோ ரூட்.

12 முறை ஜோ ரூட் 150+ ரன்கள் அடித்ததில், 7 முறை கேப்டனாக இருந்தபோது அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார் ஜோ ரூட். 3ம் இடத்தில் பிரயன் லாரா, மைக்கேல் கிளார்க், மஹேலா ஜெயவர்தனே, க்ரேம் ஸ்மித் ஆகிய நால்வரும் உள்ளனர். டெஸ்ட்டில் கேப்டனாக 8 முறை 150+ ஸ்கோர் அடித்த டான் பிராட்மேன் 2ம் இடத்திலும், 9 முறை 150+ ஸ்கோர் அடித்த விராட் கோலி முதலிடத்திலும் உள்ளனர்.