இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் மிகச்சிறப்பான பவுலிங்கால் 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் பும்ரா, அவரது கெரியரில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வீசினார்.
இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்
இன்னிங்ஸின் 2வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய பும்ரா, அந்த ஓவரிலேயே ஜேசன் ராய் மற்றும் ரூட் ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கினார். அதன்பின்னர் பேர்ஸ்டோ(7), லிவிங்ஸ்டோன்(0), டேவிட் வில்லி(21), கர்ஸ்(15) ஆகியோரது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்த இங்கிலாந்து அணி வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா 7.2 ஓவர்கள் பந்துவீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது கெரியர் பெஸ்ட் பவுலிங்.
இதையும் படிங்க - கோலி ஃபார்மில் தான் இருக்கார்.. ஆனால் லக் இல்ல..! ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் வீரர்
இந்த அருமையான பவுலிங்கின் மூலம் எலைட் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார் பும்ரா.
இந்தியாவிற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் ஸ்டூவர்ட் பின்னி (6/4), அனில் கும்ப்ளே (6/12) ஆகிய இருவருக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா (6/19).
ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்த பவுலர்களில் வக்கார் யூனிஸ் (7/36), வின்ஸ்டன் டேவிஸ் (7/51), கேரி கில்மர்(6/14) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பும்ரா (6/19) உள்ளார்.
