டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரித் பும்ரா 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. அதனால் சில வீரர்களை இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் சில இளம்வீரர்களை பரிசோதித்தது. இந்த சீசனில் ரோஹித், பும்ரா ஆகியோர் பெரிதாக சோபிக்காததால் தான் அந்த அணியால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

பும்ராவின் பவுலிங்கில் எதிரணி வீரர்கள் மிகக்கவனமுடன் ஆடினர். பும்ராவின் பவுலிங்கில் ரன் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால், பும்ராவிற்கு இந்த சீசனில் பெரிதாக விக்கெட் கிடைக்கவில்லை. இந்த சீசனில் 13 போட்டிகளில் 12 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார் பும்ரா. இது டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் 250வது விக்கெட்.

ஐபிஎல், சர்வதேச டி20, உள்நாட்டு டி20 ஆகிய அனைத்தையும் சேர்த்து மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் பும்ரா, 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

பும்ரா - 250 விக்கெட்டுகள்
புவனேஷ்வர் குமார் - 223 விக்கெட்டுகள்
ஜெய்தேவ் உனாத்கத் - 201 விக்கெட்டுகள்
வினய் குமார் - 194 விக்கெட்டுகள்