டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ராவின் உருக்கமான மெசேஜ்
டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா முதல் முறையாக அதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக இருப்பதுடன், நன்றாக செட்டும் ஆகிவிட்டது.
இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்
இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடவில்லை என்றாலும், அவர் மாதிரியான ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் இருக்கிறார். அஷ்வின், சாஹல் என தரமான ஸ்பின் பவுலிங் யூனிட்டும் உள்ளது.
ஃபாஸ்ட் பவுலிங் தான் பிரச்னையாக உள்ளது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் டெத் ஓவர்களில் அண்மைக்காலமாக அதிகமான ரன்களை வழங்கிவருகின்றனர். இந்நிலையில், பவர்ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி, தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகிய மூவரில் ஒருவர் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாததுலாம் இந்தியாவுக்கு பெரிய பிரச்னையே இல்ல..! கெத்தான காரணம் கூறும் வாரிசு வீரர்
இந்நிலையில், டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ரா, டி20 உலக கோப்பையில் ஆடமுடியாதது வேதனையளிக்கிறது. என் மீது அன்பும் அக்கறையும் கொண்டு நான் குணமடைய என்னை வாழ்த்தியவர்கள், ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் குணமடைந்து ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை உற்சாகப்படுத்துவேன் என்று பும்ரா டுவிட்டரில் கூறியுள்ளார்.