இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது நியூசிலாந்து. 

முதல் ஒருநாள் போட்டியில் 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றி பெற்ற நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில், இந்திய அணியை 274 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று மவுண்ட் மாங்கனூயில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 297 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரில் அடித்து அபார வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ராகுலின் அபாரமான சதத்தால் தான் 296 ரன்களை அடித்தது. இந்திய அணி 62 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 13வது ஓவரிலேயே ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேனான ராகுல் களத்திற்கு வந்துவிட்டார். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல், மனீஷ் பாண்டேவுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். டாப் ஆர்டர்கள் சொதப்பிய நிலையில், பொறுப்புடன் ஆடி சதமடித்த ராகுல், 112 ரன்களை குவித்து, இந்திய அணி 296 ரன்களை குவிக்க காரணமாக திகழ்ந்தார். 

Also Read - ஒரே ஓவரில் வெற்றியை தாரைவார்த்த பவுலர்.. இந்திய அணி அடைந்த அசிங்கத்துக்கு முக்கிய காரணம் இதுதான், இவர்தான்

ராகுல் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது, 20வது ஓவரை நீஷம் வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு, ராகுல் வேகமாக ரன் ஓடினார். அப்போது, அவரை தடுக்கும் வகையில் நீஷம் நகர்ந்தார். ராகுலின் ஓட்டத்தை தடைசெய்ய வேண்டும் என்பதற்காக குறுக்கே வந்தார் நீஷம். ஆனால் சமாளித்து ஓரமாக ஓடிவிட்ட ராகுல், ரன் ஓடி முடிந்ததும் நீஷமிடம் சென்று பேசினார். இருவரும் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மிகவும் சீரியஸான வாதமாக அது இல்லை. விரும்பத்தகாத விஷயமாகவும் ஆகவில்லை. அந்த வீடியோ இதோ... 

Untitled from Cricket Fan on Vimeo.