இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆட உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால் உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் இந்திய அணி தோல்வியை விரும்பாது. ஆஸ்திரேலிய அணியின் சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்திய இந்திய அணி, சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. அதனால் வெற்றி முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

இந்த போட்டியில் சாஹலுக்கு ஓய்வளிக்கபட்டு ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி வேறு எந்த மாற்றமும் அணியில் இல்லை. ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், கோலி(கேப்டன்), ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஜடேஜா, குல்தீப், பும்ரா, ஷமி.