Asianet News TamilAsianet News Tamil

பிரம்மாண்டமாக தொடங்கிய ISPL T10 – முதல் போட்டியிலேயே அமிதாப் பச்சனின் அணியும், அக்‌ஷய் குமாரின் அணியும் மோதல்!

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே அக்‌ஷய் குமாரின் ஸ்ரீநகர் அணியும், அமிதாப் பச்சனின் மும்பை அணியும் மோதுகின்றன.

ISPL T10 League Starts Today with Opening Ceremony and Amitabh Bachchan's Mumbai Team and Akshay Kumar's Srinagar Team Clash Today rsk
Author
First Published Mar 6, 2024, 7:20 PM IST

டி20 தொடர் போன்று டி10 தொடரும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. அபுதாபி டி10 லீக், ஐரோப்பியா கிரிக்கெட் லீக், லங்கா டி10 லீக், ஆப்பிரிக்கா டி10 லீக், ஜிம் ஆப்ரோ டி10, யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் என்று உலகம் முழுவதும் டி10 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி10 லீக் தற்போது இந்தியாவிலும் நடக்க இருக்கிறது. இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற பெயரில் இந்த டி10 லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்த டி10 தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

 

 

6 அணிகள்:

மஜ்ஹி மும்பை, ஸ்ரீநகர் ஹே வீர், பெங்களூரு ஸ்டிரைக்கர்ஸ், சென்னை சிங்கம்ஸ், ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத், டைகர்ஸ் ஆப் கொல்கத்தா

6 அணிகளின் உரிமையாளர்கள்:

மஜ்ஹி மும்பை – அமிதாப் பச்சன்

ஸ்ரீநகர் ஹே வீர் – அக்‌ஷய் குமார்

பெங்களூரு ஸ்டிரைக்கர்ஸ் – ஹிருத்திக் ரோஷன்

சென்னை சிங்கம்ஸ் – சூர்யா

ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராம் சரண்

டைகர்ஸ் ஆப் கொல்கத்தா – சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர்

ஐஎஸ்பிஎல் டி10 அட்டவணை:

06 – 03 – 2024 – ஸ்ரீநகர் – மும்பை

07 – 03 – 2024 – சென்னை – கொல்கத்தா

07 – 03 – 2024 – ஹைதராபாத் – பெங்களூரு

08 – 03 – 2024 – சென்னை – பெங்களூரு

08 – 03 – 2024 – கொல்கத்தா – மும்பை

09 – 03 – 2024 – ஹைதராபாத் – மும்பை

09 – 03 – 2024 – பெங்களூரு – ஸ்ரீநகர்

10 – 03 – 2024 – மும்பை – சென்னை

10 – 03 – 2024 – ஹைதராபாத் – கொல்கத்தா

11 – 03 – 2024 – கொல்கத்தா – பெங்களூரு

11 – 03 – 2024 – ஹைதராபாத் – ஸ்ரீநகர்

12 – 03 – 2024 – ஸ்ரீநகர் – சென்னை

12 – 03 – 2024 – பெங்களூரு – மும்பை

13 – 03 – 2024 – ஸ்ரீநகர் – கொல்கத்தா

13 – 03 – 2024 – ஹைதராபாத் – சென்னை

14 – 03 – 2024 – அரையிறுதிப் போட்டி 1

14 – 03 – 2024 – அரையிறுதிப் போட்டி 2

15 – 03 – 2024 – இறுதிப் போட்டி

இந்தப் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனின் தொடக்க விழாவில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் சூர்யா, ராம் சரண், அமிதாப் பச்சன் என்று அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், சச்சின், சூர்யா, ராம் சரண், அக்‌ஷய் குமார் ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், சோனிலைவ் ஆப் மற்றும் வெப்சைட்டிலும் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது. இன்று தொடங்கிய இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் லீக் போட்டியில் அமிதாப் பச்சனின் மும்பை அணியும், அக்‌ஷய் குமாரின் ஸ்ரீநகரி அணியும் மோதுகின்றன. இன்று தொடங்கிய இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் வரும் 15 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ரவுண்ட் ராபின் முறையில் ஒரு போட்டியில் மோதும். அதன்படி ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடும். இதில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதி சுற்றிலும், 2 மற்றும் 3 ஆவது இடங்களில் உள்ள அணிகள் 2ஆவது தகுதி சுற்றிலும் மோதும். முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2ஆவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியானது முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2ஆவது தகுதிச் சுற்றில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரில் பங்கேற்கும் அணியை சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். ஏற்கனவே மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூர் அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷர் குமார், ஹைதராபாத் அணியை ராம்சரணும், சென்னை அணியை நடிகர் சூர்யாவும் வாங்கியுள்ளனர். கொல்கத்தா அணியை யாரும் வாங்கவில்லை.

பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலார் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் (ஐஎஸ்பிஎல்) முக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர் ஆவார். சமீபத்திய அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத திறமையாளர்களுக்கு ஒரு பெரிய மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க தளத்தை வழங்குவதை ISPL நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிரிக்கெட் வீரரும் ரவி சாஸ்திரி, ஐஎஸ்பிஎல் தொடரின் தலைமை வழிகாட்டியாக இணைந்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios