சாப்பாடு நல்லா இருக்காதா? டார்க் சாக்லேட் வாங்கிய இஷான் கிஷான்: வைரலாகும் வீடியோ!
இஷான் கிஷான் டார்க் சாக்லேட் வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்து 12 ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 20 ஆம் தேதி டிரினிடாட் மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக தொடங்கும் மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷான் கிஷான் அறிமுகமானார். ஆனால், அவர் 20 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், இஷான் கிஷான் இன்று தனது, 25ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங், வினோத் தோமருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
இது ஒரு புறம் இருக்க, இஷான் கிஷானின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஷாப்பிங் சென்றுள்ளனர். வரும் 20 ஆம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடக்க உள்ள நிலையில் இந்திய வீரர்கள் டிரினிடாட்டின் தலைநகரான போர்ட் ஆஃப் ஸ்பெயின் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரும் டார்க் சாக்லேட் வாங்கினர். அதோடு, இங்கு சாப்பாடு நல்லா இல்லை என்று இஷான் கிஷான் சிரித்துக் கொண்டே பேசிவிட்டு, இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டா பதிவின் மூலமாக அப்டேட் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா; திரும்ப வருவது உறுதி!
Video Credits: வீடியோவிற்கு நன்றி - @விமல்குமார்