அஸ்வின் பந்து வீசுவதற்கு அனுமதி உண்டா? பெனால்டி டைம் விதிகள் என்ன சொல்கிறது?

இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் குடும்ப அவசர நிலை காரணமாக வீடு திரும்பிய அஸ்வின் தற்போது திரும்பி வந்த நிலையில் அவர் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Is it Possible for Ravichandran Ashwin May allow to bowl today due to Penalty Time rule? rsk

இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டினார். குறைந்த டெஸ்ட் போட்டிகள் (98) மற்றும் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி வீரர்களில் இரண்டாவது இடத்தில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

Shubman Gill Run Out: 91 ரன்னில் ரன் அவுட்டான சுப்மன் கில் – சரியான வேலையை பார்த்துவிட்ட குல்தீப் யாதவ்!

இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் முடிந்த போது அவர் தெரிவித்ததாவது, ““நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் ஆனேன்.

நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது புதிய பந்தில் பவுலிங் செய்ய முத்தையா முரளிதரன் விரும்பவில்லை. அதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. டீசென்டான முதல் தர கிரிக்கெட் அனுபவம் எனக்கு இருந்தது. நான் டெஸ்ட் பவுலரா என சந்தேகித்த நபர்களும் உள்ளனர். இதோ 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாதனை மோசமானது இல்லை. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

India vs England 3rd Test, 4th Day: அம்மாவின் உடல்நிலை ஓகே – மீண்டும் அணியில் இணையும் அஸ்வின்!

இந்த நிலையில் தான் 500ஆவது விக்கெட் கைப்பற்றிய அதே நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப சூழல் காரணமாக சென்னை திரும்பினார். இதன் காரணமாக 3ஆவது நாளான நேற்று அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக விளையாடினார். அஸ்வின் இல்லாத நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் மட்டுமே மாறி மாறி பந்து வீசினர்.

முதல் முறையாக சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் – ஆல் ஏரியாலயும் கில்லின்னு காட்டிய எம்ஐ!

இந்த நிலையில் தான் அம்மாவின் உடல்நிலை பிரச்சனை காரணமாக சென்னை திரும்பிய அஸ்வின் தற்போது அம்மாவின் உடல்நிலை எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் இன்று அணியில் இணைகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இன்று இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தால் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்திய அணி அதிகமாக ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்தப் போட்டியில் அஸ்வின் பந்து வீசுவதற்கு நடுவர்கள் அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வீரர் களத்திற்கு வெளியில் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ, அவ்வளவு நேரம் களத்தில் பீல்டிங் செய்ய வேண்டும். அதன் பிறகே தான் அந்த வீரருக்கு பவுலிங் செய்ய அனுமதி வழங்கப்படும். நேற்று முழுவதும் அஸ்வின் இல்லாத நிலையில் இன்று அவர் அணியில் இடம் பெறுகிறார். ஆதலால், அஸ்வினின் நிலையை கருத்தில் கொண்டு பெனால்டி டைம் விதிகள் கருத்தில் கொள்ளப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios