இந்திய அணியின் அடுத்த விராட் கோலி ஷுப்மன் கில் தான்..! இர்ஃபான் பதான் புகழாரம்
விராட் கோலியை போல் 3 ஃபார்மட்டிலும் ஆதிக்கம் செலுத்தவல்ல பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் என்றும் தான் அவரது பெரிய ரசிகன் என்று இர்ஃபான் பதான் கில்லுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தனக்கான இடத்தை பிடித்த ஷுப்மன் கில்:
ஒருநாள், டெஸ்ட், டி20 என 3 ஃபார்மட்டிலும் அபாரமாக பேட்டிங் ஆடி தனக்கான இடத்தை பிடித்துள்ளார் ஷுப்மன் கில். அண்மைக்காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த 10வது வீரர் என்ற சாதனையை படைத்து, அந்த சாதனைக்கு சொந்தக்கார வெகுசில வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அந்த தொடரில் ஒரு சதம் மற்றும் இரட்டை சதம் என அசத்தினார் கில்.
விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன்..! பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிரடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் கில் ஆடினார். கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடினாலும், டி20 கிரிக்கெட்டில் அவரது ஸ்டிரைக் ரேட் எப்போதுமே விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதை உறுதி செய்வதுபோலவே, முதல் 2 டி20 போட்டிகளில் அவர் சொதப்ப, அவரை நீக்கிவிட்டு பிரித்வி ஷாவை ஆடவைக்க வேண்டும் என்ற கருத்துகள் வலுத்தன.
விமர்சனங்களுக்கு பதிலடி:
தன் மீது விமர்சனங்கள் வலுத்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்தார் கில். அதுவும் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி அந்த சதத்தை அடித்தார். 63 பந்தில் 126 ரன்களை குவித்தார். டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய ஷுப்மன் கில், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சதமடித்த ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா ஆகிய வீரர்களுடன் சாதனை பட்டியலில் இணைந்தார்.
இந்திய அணியின் தவிர்க்க முடியாத மாபெரும் வீரராக உருவெடுத்துள்ள ஷுப்மன் கில் தான் அடுத்த விராட் கோலி என்று புகழாரம் சூட்டியுள்ளார் இர்ஃபான் பதான்.
அடுத்த விராட் கோலி:
இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், ஷுப்மன் கில் பேட்டிங்கிற்கு நான் பெரிய ரசிகன். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. ஷுப்மன் கில் 3 ஃபார்மட்டுக்குமான பிளேயர். விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாக 3 ஃபார்மட்டிலும் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்திவருகிறார். அவருக்கு அடுத்து 3 ஃபார்மட்டிலும் ரூல் செய்யப்போகும் வீரர் ஷுப்மன் கில் தான். கில்லுக்கு அந்த திறமையும் தகுதியும் இருக்கிறது என்று இர்ஃபான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார்.